27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்

இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் இன்று (10) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மாவட்ட மேலதிக அரச அதிபர் ஊடாக மகஜரொன்றையும் கையளித்திருந்தனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

அனுரவை சந்திக்க முடியாவிட்டால் கழுத்தை அறுப்பேன்: வாளுடன் ரகளை செய்தவர் கைது!

Pagetamil

பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணை இழுத்துச் சென்ற முதலை!

east tamil

Leave a Comment