திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் கடற்படை சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், மதுபோதையில் நடந்தது தெரிய வந்துள்ளது.
கடற்படை முகாமில் படிக்கட்டுகளில் கடற்படை வீரர்கள் இருவர் மது அருந்திய நிலையில் கடற்படை வீரர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 8ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
நான்கு கடற்படையினரும் இந்த இடத்தில் மது அருந்திவிட்டு அவர்களில் இருவர் அந்த இடத்தை விட்டுச் சென்றதையடுத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கருதுகின்றனர்.
உயிரிழந்த கடற்படை வீரருடன் மது அருந்திய கடற்படை வீரரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைக்கு மேலதிகமாக கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1