ஹொரவப்பொத்தானை- ஹெப்பிட்டிக்கொலாவ வீதியில் கியூலக்கட பகுதியில் ஹைஏஸ் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (10) காலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்காணல் ஒன்றுக்காக சென்றவர்களே விபத்தில் சிக்கினர்.
வாகனம் வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹெப்பிட்டிக்கொலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்க மாற்றப்பட்டுள்ளனர்.
சாரதியின் அசமந்தத்தினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
2
+1
1