இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சரியென்றாலும் தவறாயினும் மக்களின் கருத்துப்படி அவர்கள் பதவியை விட்டு செல்ல வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிரிக்கெட் சபை மக்களின் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும் என்று கூறிய அமைச்சர், இந்த விவகாரத்தை வெகுதூரம் இழுக்காமல் உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை பதவி நீக்கம் செய்யுமாறு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1