நேற்று கொழும்பு பிரதேசத்தை பாதித்த கடும் மழை மற்றும் காற்றின் போது கொள்ளுப்பிட்டி ஆர்.டி மெல் மாவத்தை சார்ள்ஸ் டிரைவ் வீதிக்கு அருகில் மரம் ஒன்று விழுந்ததில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளன.
முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1