ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
தேர்தல் முறைமை சீர்திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் ஊழல் அமைப்பை பாதுகாக்க ஜனாதிபதி முற்படுகிறார் என்ற எதிர்ப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இன்று கிரிக்கெட் நிர்வாக சர்ச்சை பற்றியும் ஜனாதிபதி குறிப்பிடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1