27 C
Jaffna
January 4, 2025
Pagetamil
இலங்கை

யாழில் ஒரு கண்காட்சி

இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க. லவகுசராசா தலைமையில் வடக்கு கிழக்கிலிருந்து வருபை தந்த பெருமளவிலான மக்களின் பங்கேற்புடன் நல்லூர் கிட்டு பூங்காவில் இன்று காலை நடைபெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த 2022 ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டிய 100 நாள் செயல் முனைவின் இறுதி நாளான 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 08ம் திகதி வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வாக “ ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” வேண்டும் எனும் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டிருந்தது.

இப்பிரகடனம் வெளியிடப்பட்டு ஓராண்டு பூர்த்தி நாளான இன்று வடக்கு கிழக்கு மக்கள் ஒன்றிணையும் “ இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம்” எனும் கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக் கழக மாணவர்கள், தொழில் சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதுளையில் அதிகரித்த நாய்க்கடி விவகாரம்: செல்லப்பிராணிகள் கடிப்பதே அதிகம்!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச் சூடு: ஐவர் இலக்கு – ஒருவர் உயிரிழப்பு!

east tamil

யாழில் மதுபானச்சாலைக்குள் ரௌடிகள் வெறியாட்டம்!

Pagetamil

பசிலின் முறைகேடுகள் பற்றி சிஐடியில் முறையிட்ட வீரவன்ச

Pagetamil

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கிருமி நாசினிகள் மீட்பு!

Pagetamil

Leave a Comment