அம்பாறை பண்டாரதுவ பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பண்டாரதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
42 வயதானவரே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்றிரவு வீட்டின் பின்புறம் நீராடச் சென்ற போது அங்கு வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கும் இவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1