கண்டி, மஹியங்கனை வீதியில் ரம்புக்வெல்ல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த பழக்கடை ஒன்றின் பின்னால் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கடையின் உரிமையாளரான ரம்புக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மண்மேட்டில் புதையுண்ட நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு, தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1