25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

ரணில் அரசின் மின் கட்டண உயர்வால் திண்டாடும் ஏழைகள்: ஆய்வில் தகவல்!

மின்சார சபையின் அறிக்கையின் படி, நாட்டிலுள்ள மொத்த மின் பாவனையாளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் மாதாந்தம் ஐம்பது யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் எனவும்,  சமீபத்திய திருத்தங்கள் காரணமாக அவர்களின் மின் கட்டணங்கள் 412 சதவீதம் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

சுமார் 50 மின் அலகுகளைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மையானவர்கள் என்று கூறும் பேராசிரியர், மின் கட்டணத் திருத்தத்தில் வழிபாட்டுத் தலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாதத்திற்கு 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மத வழிபாட்டுத் தலங்களில் 597 சதவீதம் மின்கட்டணம் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

நூறு யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோரின் மின் கட்டணம் 203 சதவீதமும், 150 யூனிட் பயன்படுத்தும் மின் நுகர்வோரின் மின் கட்டணம் 163 சதவீதமும், இருநூறு யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோரின் மின் கட்டணம் 137 சதவீதமும்,  250 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துவோரின் மின்சாரக் கட்டணம் 150 வீதத்தாலும், 400 யூனிட்டுக்கும் பயன்படுத்துவோரின் மின்சாரக் கட்டணம் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அத்துகோரள சுட்டிக்காட்டினார்.

மேலும், 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்திய சிறு கைத்தொழில்களின் மின் கட்டணம் 143 சதவீதமும், 200 யூனிட் பயன்படுத்திய வர்த்தக நிறுவனங்களின் மின் கட்டணம் 195 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் மின்சாரத்தை விற்பனை செய்ததன் மூலம் மின்சார சபை 39,800 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்த வசந்த அத்துகோரள, உள்நாட்டு துறையில் 9,600 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வர்த்தகத் துறை மூலம் ஈட்டிய தொகை 8100 கோடி ரூபாய்.

மின்கட்டண உயர்வால் குறைந்த வருமானம் உள்ளவர்களே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் இதனால் பிள்ளைகளின் கல்விக்கு செலவு செய்வதே பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மின்சாரம் இல்லாமல் வாழும் அபாயம் காணப்படுவதாக அத்துகோரள தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் சிலர் தங்களுடைய நகைகளை அடமானம் வைத்து அல்லது விற்பனை செய்து மின்கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள மின்சாரக் கணக்குகளின் எண்ணிக்கை 69,36,735 எனவும் அவற்றில் 86 வீதமானவை உள்நாட்டு பாவனையாளர்களுடையது எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

மின் கட்டணம் செலுத்தும் வீட்டு பாவனையாளர்களின் கணக்குகளின் எண்ணிக்கை ஐம்பத்தொன்பது இலட்சத்து எழுபத்தாயிரத்து முந்நூற்று இருபத்தி ஆறு என வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து கழற்றி விடப்படும் கட்சிகள் எவை?: ஞாயிறு தீர்மானம்!

Pagetamil

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

Leave a Comment