ஹூருன் அமைப்பு, 2022-23 நிதி ஆண்டில் அதிக நன்கொடை வழங்கிய இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஹெச்சிஎல் இணை நிறுவனர் ஷிவ் நாடார் முதல் இடத்தில் உள்ளார்.
ஷிவ் நாடார் 2022-23 நிதி ஆண்டில் ரூ.2,042 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். சராசரியாக நாளொன்றுக்கு ரூ.5.6 கோடி அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். 2-வது இடத்தில் விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி உள்ளார். அவர் கடந்த நிதி ஆண்டில் ரூ.1,770 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். மூன்றாம் இடத்தில் முகேஷ் அம்பானி (ரூ.376 கோடி), நான்காம் இடத்தில் குமார மங்களம் பிர்லா (ரூ.287 கோடி), ஐந்தாவது இடத்தில் கவுதம் அதானி (ரூ.285 கோடி) உள்ளனர்.
பஜாஜ் குடும்பம் ரூ.264 கோடி நன்கொடை வழங்கி இந்தப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் (ரூ.241 கோடி) 7-வது இடத்திலும், சைரஸ் பூனாவாலா மற்றும் ஆதர் பூனாவாலா ஆகியோர் (ரூ.179 கோடி) 8 -வதுஇடத்திலும் உள்ளனர்.நந்தன் நிலகேணி, நிதின் காமத் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் ரோஹினி நிலகேணி, அனு அகா, லீனா காந்திதிவாரி உட்பட 7 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ரோஹினி நிலகேணி ரூ.170 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.