இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக இன்று காலை முதல் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
நிர்வாக பலவீனம் காரணமாக கிரிக்கெட் தோல்விகளால் நாட்டிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதால், கிரிக்கெட் நிர்வாக குழு உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சபையின் அனைத்து அதிகாரிகளும் உடனடியாக பதவி விலக வேண்டும், செயலாளர் மொஹான் டி சில்வா மாத்திரமே பதவி விலகியுள்ளார். ஆனால், இது போதாது என போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர்.
சுற்றுச்சூழல் ஆர்வலரும் சமூக ஆர்வலருமான அஜந்த பெரேராவும் இந்த இடத்தில் சத்தியாக்கிரகத்தை தொடங்கினார்.
இதன் காரணமாக கிரிக்கெட் நிறுவனத்தை சுற்றி சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர், பொலிசார் போராட்டக்காரர்களை அகற்றினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1