முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
வற்றாப்பளை, வற்றாபளை மேற்கு, புதரிக்குடா, 4ம் வட்டாரம், 3ம் வட்டாரம்,
தணிணீரூற்று மேற்கு, ஹிஜிராபுரம், நீராவிபிட்டி மேற்கு, நீராவிபிட்டி
கிழக்கு, குமாரபுரம், சிலாவத்தை, சிலாவத்தை மாதிரி கிராமம், உன்னாபிலவு,
தீர்த்தக்கரை, கள்ளப்பாடு தெற்கு , கள்ளப்பாடு வடக்கு, வண்ணாங்குளம்,
கரைச்சி குடியிருப்பு, கோவில்குடியிருப்பு, செல்வபுரம், வட்டுவாகல், ஆகிய
கிராமங்களை சேர்ந்த குடும்பங்ளில் இதுவரை தேசிய நீர் வழங்கல்
வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்ட இலவச குடிநீர் இணைப்பை
பெற்றுக்கொள்ளாதவர்கள் 10.11.2023 இற்கு முன்னர் அலுவலத்துடன் தொடர்பு
கொண்டு தேசிய அடையாள அட்டை, குடும்ப பதிவு அட்டை மற்றும் காணி தொடர்பான
ஆவணங்களுடன் தங்களின் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.
அத்துடன் ஏற்கனவே பதிவுகளை மேற்கொண்டு இதுவரை நீர் இணைப்பை பெற்றுக்
கொள்ளாதவர்களும் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களின் பதிவுகளை மீள்
உறுதி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
10.11.2023 திகதிக்கு பின்னரான பதிவுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு
எதிர்வரும் காலங்களில் வழங்கப்பட மாட்டாது என்பதையும் தேசிய நீர் வழங்கல்
வடிகாலமைப்புச் சபை தெரிவித்துக் கொள்கிறது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முல்லைத்தீவு நகர அலுவலகம்
மூன்றாம் கட்டை (மஞ்சள் பாலத்தடி) சிலாவத்தையில் அமைந்துள்ளது. மேலதிக
தகவல்களுக்கு 021 229 2070 அல்லது 070 5500 440 என்ற இலக்கங்களை தொடர்பு
கொள்ள முடியும்.