இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (2) முதல் ஒரு வருடத்திற்கு இது அமுலுக்கு வரும் என நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
சீனி வரி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபாவிலிருந்து 300, 325 ரூபாவாக அதிகரிக்குமென இறக்குமதியாளர்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சீனி வரி அதிகரிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு பிரதான சீனி இறக்குமதியாளர் 25 சத வரியின் கீழ் 8000 மெட்ரிக் தொன் சீனியை இறக்குமதி செய்துள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, வெள்ளை சீனியின் இறக்குமதிஇறக்குமதி வரி, 2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிலோவுக்கு 50 ரூபாவிலிருந்து 25 சதங்களாக குறைக்கப்பட்டது. இதனால் கடந்த மூன்றாண்டுகளில் அரசுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருந்தது.