ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், அலைபேசிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் விரத வழிபாட்டுக்கு ஆலயம் செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த 28 வயதுடையவரே கைது செய்யப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1