பருத்தித்துறை – கொடிகாமம் தனியார் பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை – கொடிகாமம் வழித்தடத்தில் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்தே இவ்வாறு தடம்புரண்டு இன்று (31) செவ்வாய்க்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பருத்தித்துறை – கொடிகாமம் இடையேயான 759 வழித்தடத்தில் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வரும் குறித்த தனியார் பேருந்து சேவையில் ஈடுபடுவதற்காக கருக்காய் – வரணி பகுதியில் இருந்து பருத்தித்துறை பேருந்து நிலையத்தை நோக்கி பயணித்துள்ளது.
இதன்போது சில பயணிகளை ஏற்றிச் சென்ற போது கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியின் நித்திரைத் தூக்கம் காரணமாகவே குறித்த பேருந்து தரம்புரண்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.