உறங்கிக்கொண்டிருந்த யாசகர் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டி கொளுத்திய நபரை கைது செய்துள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் முன்பாக உள்ள தனியர் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த யாசகர் மீது, கடந்த 29ஆம் திகதி இரவு பெற்றோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.
உயிரிழந்த யாசகர் அந்த ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் “நீ குளிக்கமாட்டாயா? குளிக்காவிட்டால் உனக்கும், ஆடைகளுக்கும் தீ வைப்பேன். இந்த இடத்தில் படுத்தால் அதுதான் நடக்கும்” என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளார்.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமை (29) இரவு பெற்றோலை ஊற்றி கொளுத்திவிட்டார்.
யாசகரின் அலறல் சத்தம் கேட்டு, அயலில் இருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர் திங்கட்கிழமை (30) காலை மரணமடைந்தார்.
64 வயதான தர்மதாஸ என்பவரே மரணமடைந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைக்கு அடிமையானவர். மனநோயாளி போல நடித்து தனது எதிரிகளை பயமுறுத்துபவர் என பொலிசார் தெரிவித்தனர்.