யாழ் மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (26) வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன் போது- நகர அபிவிருத்தி அதிகாரசபையால் மாவட்டத்தில் சுற்றுலா துறை உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் காணிகள் தேவை என நகர அபிவிருத்தி பணிப்பாளரால் கோரிக்கை விடப்பட்டது.
குறித்த திட்டங்கள் என்ன? இவை யாரால் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது தொடர்பில் முறையான விபரங்கள் தேவை என பாராளுமன்ற உறுப்பினர்களால் கேள்விகள் எழுப்பபட்ட நிலையில் ஓருங்கிணைப்பு குழுவின் தலைவரினால் குறித்த எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயு்ந்து அறிக்கை தருவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது.
குழுவின் தலைவராக அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் நியமிக்கப்பட்டதோடு
அவருடன் இணைந்ததாக ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் இளங்கோவன் மற்றும் அந்தந்த பகுதி பிரதேச செயல்கள் அடங்கியவர்கள் குழுவாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.