25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
கிழக்கு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரால் பதற்றம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் நேற்று மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அடாவடியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்குவந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அடாவடியில் ஈடுபட்டார்.

இதன்போது அப்பகுதிக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

குறித்த பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக குறித்த கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்ட நிலையில், அவற்றினை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மாநகரசபை ஆணையாளர், சுமனரத்ன தேரரிடம்  தெரிவித்திருந்தாகவும் எனினும் அவர் நேற்று அங்கு சென்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

குறித்த கட்டிட இடிபாடுகளை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் அவருடைய சகாக்களும் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததுடன் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment