24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இந்தியா

இணைய கடன் வழங்கும் இலங்கை கும்பலின் மிரட்டலால் தற்கொலை செய்த இந்திய குடும்பம்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இலங்கையிலிருந்து இணையத்தில் உடனடி கடன் வழங்கும் குழுவொன்றின் மீது கவனம் செலுத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி, 39 வயதான நிஜோ, அவரது மனைவி ஷில்பா (32) மற்றும் அவர்களது குழந்தைகளான எபல் (7), ஆரோன் (5) ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர்களது உடல்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களில் ஒருவரின் ஆபாசப் படங்களை அவரது உறவினர்களுக்கு அனுப்பப் பயன்படுத்திய எண்ணை போலீஸார் கண்டறிந்ததும் விசாரணை வேறு திருப்பத்தை எடுத்தது.

“விசாரணையின் போது, ​​ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்களில் ஷில்பா கடன் வாங்கியிருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அவற்றை திருப்பிச் செலுத்துவதில் அவருக்கு சிரமம் உள்ளது. பின்னர், இந்த நிறுவனங்கள் ஷில்பா மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியது. அந்த கையடக்கத் தொலைபேசி எண்ணைப் பார்த்தபோது அது இலங்கையைச் சேர்ந்த ஒன்று என்பதை உணர்ந்தோம். உண்மையில், அந்த குழுக்கள் இலங்கையில் இருந்து இயங்கி வருகின்றன” என்று இந்திய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

east tamil

மகா கும்பமேளாவுக்கு தயாரான பிரயாக்ராஜ்: 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

Pagetamil

ஆக்ராவில் அவுரங்கசீப் மாளிகை இடிப்பு

Pagetamil

7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

Pagetamil

Leave a Comment