27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
உலகம்

கணவனுக்கு பிரியாணியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து கழுத்தறுத்து கொன்ற மனைவி!

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவருக்கு போதைப்பொருள் கலந்த பிரியாணியை சாப்பிடக் கொடுத்த பின், கழுத்தை அறுத்த குற்றச்சாட்டில், இந்தியாவில் தூக்கிலிடப்பட உள்ளார்.

டெர்பியைச் சேர்ந்த ராமன்தீப் கவுர் மான் (38) தனது கணவருக்குப் பிடித்தமான உணவான பிரியாணியில், போதைப்பொருளையும், தூக்க மாத்திரைகளையும் கலந்து கொண்து்துள்ளார்.

பின்னர் கணவர் தூங்கும் போது அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

ராமன்தீப் கவுர் மானுக்கு கள்ளக்காதல் இருநதது. அது தவிர, கணவரின் 2 மில்லியன் டொலர் ஆயுள் காப்பீட்டு பணத்தை பெற்றுக்கொள்ளவே இந்த கொலையை செய்துள்ளார்.

செப்டம்பர் 2, 2016 இல், இந்தியாவில் உள்ள அவரது அம்மாவின் விடுமுறை இல்லத்தில் அவர் தனது கணவர் சுக்ஜித் சிங் (34) உடன் விடுமுறையில் இருந்தபோது இந்த கொலை நடந்துள்ளது. அப்போது அவர்கள் குடும்பத்துடன் அங்கு தங்கியிருந்தனர்.

ராமன்தீப் கவுர் மான் தனது கூட்டாளியான குர்பிரீத் சிங்குடன் சேர்ந்து குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார். விசாரணையின் போது இருவரும் கள்ளக் காதலர்கள் என்று தெரியவந்தது.

ராமன்தீப் கவுர் மான் தனது கணவருக்கு தெரியாமல், குர்பரீத் சிங்குடன் உறவை தொடர்ந்தார். இந்த தம்பதியின் மூத்த மகனின் நேரில் கண்ட சாட்சியின் அடிப்படையில், அம்மாக்கு தண்டனை வழங்கப்பட்டது.

தூக்க மாத்திரைகளை கறியில் கலந்த பிறகு, அதை சிங் மற்றும் தம்பதியரின் இளைய மகன் ஆர்யன் (6) இருவரும் சாப்பிட்டனர். ஆனால் அவர்களின் மூத்த மகன் அர்ஜுன் அதை சாப்பிடவில்லை.

கணவர் சிங் தூங்கிய பிறகு, மான் தன் காதலன் குர்ப்ரீத்தை உள்ளே அனுமதித்தார். அர்ஜுன் நீதிமன்றத்தில் அவனது தாய் தந்தையை கொலை செய்த அபாயகரமான தருணங்களை விவரித்தார்.

அவர் தனது தந்தையின் பக்கத்து படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரை தலையணையால்  அமுக்கிய போது கண்விழித்ததாக அவர் கூறினார்.

அர்ஜுன் தூக்க மாத்திரை கலந்த கறியை சாப்பிடாததால், தந்தை போராடும் சத்தம் அவரை எழுப்பியது. குர்பிரீத் தலையில் சுத்தியலால் அடிப்பதற்கு முன்பு, தனது தாயார் தனது தந்தையின் கழுத்தை அறுத்ததாக குறிப்பிட்டார்.

குர்ப்ரீத்தும், சிங்கும் சிறுவயது நண்பர்கள். அவருக்கும் மானுக்கும் இடையேயான விவகாரம் ஒரு வருடம் முன்பு குடும்ப விடுமுறைக்காக டுபாய்க்கு வந்தபோது ஏற்பட்டது. சிங் டுபாயில் வாழ்ந்தார்.  குர்பிரீத் குடும்பத்துடன் அங்கு சென்றபோது, சிங்கை சந்தித்தார். 2002 ஆம் ஆண்டில், சிங் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவரது சகோதரியும் வசிக்கிறார்.

2005 இல், சிங், மானை மணந்தார். அவர்கள் தெற்கு லண்டனுக்கும், பின்னர் டெர்பிக்கும் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரது சிறந்த நண்பர் குர்பரீத் அந்த விடுமுறையின் போது மானுடன் உறவைத் தொடங்கினார். அவர்கள் தொலைபேசி, குறுஞ்செய்திகள் மூலம் உறவை வளர்த்தனர். மான் தனது திருமணத்திலிருந்து எப்படி வெளியேறுவது என்று திட்டமிடத் தொடங்கினார் என்று விசாரணையில் தெரிய வந்தது.

குடும்பமாக ஒரு மத விடுமுறையில் சிங்கின் தாயாரைப் பார்க்கச் செல்லலாமன்றும், அங்கு குர்ப்ரீத் அவர்களுடன் சேருமாறும் மனைவி மான் பரிந்துரைத்தார்.

சிங்கின் குடும்பத்தின் வழக்கறிஞர் அசோக் கண்ணா ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,  “இந்த அருவருப்பான குற்றத்தை மான் இங்கிலாந்திலும் குர்ப்ரீத் டுபாயிலும் இருந்தபோது சதி செய்தார். குர்ப்ரீத் தனது கணவரின் சகோதரனைப் போன்றவர், அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்தனர். அவர் இப்படி துரோகம் செய்ததை அவரது குடும்பத்தினரால் இன்னும் நம்ப முடியவில்லை. மான் எந்த மனவருத்தமும் காட்டவில்லை, அவர் கைது செய்யப்பட்ட தருணத்திலிருந்து மிகவும் திமிர்பிடித்திருக்கிறார். அவர் இந்த தண்டனைக்கு தகுதியானவர், ஏனென்றால் இந்த பெண் தன் சொந்த கணவனுக்கும் குழந்தைகளுக்கும் போதை மருந்து கொடுத்து கொன்றுவிடலாம். அப்படிப்பட்ட காரியத்தை யார் செய்கிறார்கள்? ஆனால் குர்ப்ரீத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரை ஊக்கப்படுத்தவில்லை. கணவனுடைய மரணத்திலிருந்து நிறைய பணம் சம்பாதிக்க திட்டமிட்டிருந்தார்.

ராமன்தீப் மற்றும் குர்ப்ரீத் இருவரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். சனிக்கிழமையன்று ஒரு நீதிபதி இந்த வழக்கை “அரிதான அரிதானது” என்று விவரித்தார்.

தீர்ப்புக்கு பதிலளித்த சுக்ஜீத்தின் தாயார் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது மகனைக் கொன்றவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

“நான் நிம்மதியாக உணர்கிறேன். எனது பிரார்த்தனைகள் பலனளிக்கப்பட்டு, நீதிமன்றத்திலிருந்து நான் எதிர்பார்த்தது கிடைத்தது. எந்த ஒரு தாயின் குழந்தையும் இப்படி சாகக் கூடாது என்பதற்காக ராமன்தீப்புக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கோரினேன்“ என்றார்.

சிங்கின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீடு மூலம் மான் பெரும் லாபம் ஈட்டுவதாக நீதிமன்றத் தீர்ப்பு கூறியது. மேலும் தம்பதியருக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பல்வேறு சொத்துக்கள் இருந்தன. கொலைக்குப் பிறகு, குர்ப்ரீத் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, துபாய்க்கு விமானத்தில் ஏற முயன்றார். இதற்கிடையில், அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள புதர்களில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரத்தம் தோய்ந்த கத்தியை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, மான் அவரது மாமியார் வீட்டில் கைது செய்யப்பட்டார்.

கொடூரமான கொலைக்குப் பிறகு, இங்கிலாந்தில் சட்ட நடவடிக்கைகள் இரண்டு சிறுவர்களும் சிங்கின் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். குர்ப்ரீத்துக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

மானுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

Leave a Comment