யேமனின் ஹூதி படைகளால் ஏவப்பட்ட மூன்று தரைவழி தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் பல ஆளில்லா விமானங்களை வடக்கு செங்கடலில் நிலைகொண்டுள்ள அமெரிக்க போர்க்கப்பலான USS கார்னி, இடைமறித்து தாக்கியழித்துள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிக்கேடியர் ஜெனரல் பாட் ரைடர், செய்தியாளர்களிடம் கூறுகிறார்.
“இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எதைக் குறிவைக்கின்றன என்பதை நாங்கள் உறுதியாகக் கூற முடியாது, ஆனால் அவை யேமனில் இருந்து செங்கடல் வழியாக வடக்கே, இஸ்ரேலின் இலக்குகளை நோக்கி ஏவப்பட்டன” என்று பென்டகன் மாநாட்டில் ரைடர் கூறுகிறார்.
அவற்றின் பறத்தல் விவரத்தின் அடிப்படையில் “சாத்தியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன” என்பதால் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரைடர் கூறுகிறார்.
மேலும் “இந்த முக்கியமான பிராந்தியத்தில் எங்கள் கூட்டாளர்களையும் எங்கள் நலன்களையும் பாதுகாக்க” தேவையான அனைத்தையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என்று கூறினார்.
இலக்கு என்ன என்பதை அமெரிக்கா இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக அவர் கூறுகிறார்.