ரம்புக்கனை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பிக்கு ஒருவர் T-56 ரக துப்பாக்கிக்கான மகசீன்கள்2 மற்றும் 161 தோட்டாக்களுடன் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹொரண பலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் பிக்கு என அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய மாணவ பிக்கு வசிக்கும் விகாரையின் மடாதிபதி வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று இரண்டு மகசீன்கள் மற்றும் தோட்டாக்களுடன் மாணவர் பிக்குவை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு மேலதிகமாக, 850 கிராம் கஞ்சா வைத்திருந்த சந்தேகத்தின் பேரில், மற்றுமொரு பிக்குவும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1