கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில், நிக்கவெரட்டிய பரீட்சை வலயத்திலுள்ள பரீட்சை நிலையமொன்றில் தோற்றும் மாணவர் ஒருவருக்கான பரீட்சையின் இரண்டாம் வினாத்தாளுக்கு பதில் எழுதிய அதிபரை கல்வி அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யவுள்ளனர்.
இதற்கான கடிதத்தை இன்று (20) வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பரீட்சை மேற்பார்வையாளர், சம்பவத்துடன் தொடர்புடைய உதவி மேற்பார்வையாளர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஆகியோர் பரீட்சை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு, பரீட்சைகள் ஆணையாளரின் தலையீட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த பதில்கள் யாருக்கு எழுதப்பட்டது என்பதை உதவி மேற்பார்வையாளர் குறிப்பாக தெரிவிக்கவில்லை.
இச்சம்பவத்தினால் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும் உதவி அதிபர் தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன்படி, தொலைதூரப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றிய அவரது பணி இடைநிறுத்தப்பட்டு, அதன் பின்னர் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.