இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 18 சதவீதத்தால் உயர்த்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (19) பிற்பகல் கூடி மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்க தீர்மானித்ததாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பதை இன்று (20) பிற்பகலுக்குள் அறிவிக்கவுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
ஒரு வருடத்துக்குள் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மின் கட்டணம் அதிகரிப்படும் அதேவேளையில், மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1