நாளை (13) வடமாகாணம் முழுவதிலுமுள்ள சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் நேற்று கலந்துரையாடல் நடத்தியதாகவும், நாளை (20) மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் பணிக்கு செல்ல மாட்டார்கள் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைவரும், பதில் நீதிவானுமாகிய ப.தவபாலன், தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக வன்னி மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.