கலகெதர நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் சந்தேகநபரொருவரை, கைது செய்துள்ளதாக கலகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்து நெரிக்கப்பட்ட சட்டத்தரணி மருத்துவ சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் கண்டி களுவான பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
760 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கலகெதர பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த சம்பவம் நடந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1