ஹமாஸின் முன்னாள் மூத்த தலைவர் ஒசாமா மசினியை நேற்று மாலை வான்வழித் தாக்குதலில் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள், இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக பிடித்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ஒசாமா மசினியை கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஒசாமா மஜினி ஹமாஸின் ஷுரா கவுன்சிலின் தலைவராகவும், ஹமாஸ் கல்வி அமைச்சராகவும் இருந்தார். 5 வருடங்களின் முன்னர், இஸ்ரேலிய சிப்பாய் கிலாட் ஷாலிட், ஹமாஸ் போராளிகளால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டபோத, அந்த விடயத்தை கையாளும் பணியிலும் இருந்தார்.
இது தொடர்பில் ஹமாஸ் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1