Pagetamil
குற்றம்

வழக்குச் செலவுக்கு பணமில்லாமல் தனக்குத்தானே தீ வைத்த முன்னாள் சிப்பாய்

குருநாகல் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக நேற்று (14) பிற்பகல் தனக்குத்தானே தீ வைத்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலேவெல தெவஹுவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு மண்ணெண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது அருகில் இருந்தவர்கள் தீயில் எரிந்த ஆடைகளை கழற்றி தீயை அணைத்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த இராணுவ வீரர் ஒழுக்கமின்மை காரணமாக இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரே எனவும், மஹவ நீதிமன்றத்தில் தமக்கு எதிரான வழக்கில் ஆஜராக பணம் இல்லை என கூறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 2வது கணவன்!

Pagetamil

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

Leave a Comment