நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்படுவார் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்பாளர்களில், வாக்கு எண்ணிக்கையில் நசீர் அஹமட்டிற்கு அடுத்ததாக அலி சாஹிர் மௌலானா இடம்பிடித்திருந்தார்.
இதன்படி, நஸீர் அஹமட்டினால் வெற்றிடமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அலி சாஹிர் மௌலானா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் நசீர் அஹம்ட்டை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த தீர்மானம் செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அலி சாஹிர் மௌலானா அடுத்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார்.