25 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் இரவு நேரங்களில் சோதனை!

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இரவு நேரங்களில் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் புதிய மாணவர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வுகளுக்கு பல்கலைக்கழக ஒழுங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்த ராகவன், பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை தடுக்க தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

துன்புறுத்தல் வழக்குகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணுக்கும் புகார்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த எண்ணில் வரும் ஒவ்வொரு புகாரும் உடனடியாக விசாரிக்கப்படும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘அர்ச்சுனாவை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்… அவருக்கு வாக்களித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்’: சைவ குருமார் கொந்தளிப்பு!

Pagetamil

கைதடி கிணற்றில் மீட்கப்பட்ட சிசு: கள்ளக்காதலால் விபரீதம்… சகோதரியுடன் சிக்கியது எப்படி?

Pagetamil

மதுபான தொழிற்சாலை சுற்றி வளைப்பில் ஒருவர் கைது

east tamil

யாழில் கரையொதுங்கிய மற்றொரு மிதவை

Pagetamil

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

east tamil

Leave a Comment