கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பரவும் கண் நோய் காரணமாக கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் மூன்று தரங்களில் உள்ள அனைத்து வகுப்புகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் சுமார் 100 மாணவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக குறித்த பாடசாலையின் 6, 7 மற்றும் 8 ஆம் தரங்களின் அனைத்து வகுப்புகளும் மூடப்பட்டுள்ளதாகவும் மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட மேற்கு கொழும்பு, மத்திய கொழும்பு, வடகொழும்பு, பொரளை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இந்நோய் பரவி வருவதாக தெரிவித்த கொழும்பு மாநகர சபை, ‘கொன்ஜக்டிவிடிஸ்’ எனப்படும் வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் பரவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 5 நாட்களுக்கு மேல் அறிகுறிகள் தென்பட்டால் கண் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.