உறவினர்களால் ஏற்றுக்கொள்ள மறுத்த 414 நோயாளர்கள் அங்கொட தேசிய மனநல சுகாதார நிறுவகத்தில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 322 பெண்களும் 92 ஆண்களும் இருப்பதாக அவர் கூறினார்.
இவர்களில் சிலர் 30 – 40 வருடங்களாக வைத்தியசாலையில் தங்கியிருப்பவர்கள் எனவும் அவர்களில் 70 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த நோயாளர்கள் 35 முதல் 90 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், சமூக சேவைகள் திணைக்களத்திற்கும் இந்த பிரச்சினை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார்.
கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகள் தற்போது குணமடைந்து வருவதாகவும், அத்தகையவர்கள் உறவினர்களால் நிராகரிக்கப்படுவது மிகவும் வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.