உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பண்டாரவளை பொலிஸாரால் ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த 500 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 22 மாணவர்கள் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாணவர்கள் வயிற்று வலி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட உணவு வகையொன்றில் கலப்படம் ஏற்பட்டுள்ளமையால் சுகவீனமடைந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. மற்றுமொரு மாணவர் குழு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1