மாத்தறையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மாத்தறை, அகரஸ்ஸ, மாபலகம போன்ற பிரதேசங்களில் தற்போது வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
ஜின் கங்கை நிரம்பி வழிவதால் மாபலகம நகரம் இன்று நீரில் மூழ்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி அல்பிட்டிய இகல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவம், பொலிஸ் மற்றும் நிவாரணக் குழுக்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மாத்தறையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையடுத்து, அங்கு மேலும் 2 நாட்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9,10ஆம் திகதிகளிலும் பாடசாலைகளக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.