அவுஸ்திரேலியாவில் யுவதியொருவருடன் உடலுறவு கொண்ட போது, திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றி வழக்கில் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவில் சட்டநடவடிக்கையை எதிர்கொண்ட காலப்பகுதியில் ஆறுதலாக இருந்த தோழியையும் அழைத்து வந்துள்ளார்.
அவர்கள் (03) இரவு 10.55 மணியளவில் அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-607 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ்க குணதிலக்க,
இந்த பதினோரு மாதங்களில் அவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. கிரிக்கெட்டின் பயிற்சியும் அதிலிருந்து கிடைத்த உத்வேகமும் இந்த காலகட்டத்தில் பொறுமையாக இருக்க உதவியது என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இலங்கையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளில் விரைவில் ஈடுபடவுள்ளதாக தனுஷ்க குணதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.