பேருவளை மாகல்கந்த பகுதியில் கதிர்காமத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துசபை பேருந்தும் கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
சொகுசு பேருந்தில் பயணித்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சாரதியும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிர்திசையில் வந்த சொகுசு பேருந்துடன், இ.போ.ச பேருந்தும் மோதியதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1