25.7 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

வவுனியா விபத்தில் 9 வயது மாணவன் பலி

வவுனியா புதுக்குளத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பாடசாலை முடிவடைந்த நேரம் உறவினரொருவர் தனது 7 வயது மகள் மற்றும் 9 வயதுடைய சிறுவனையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்ற சென்றபோதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வி.டினோஜன் என்ற மாணவனையும், மாணவியையும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

எனினும் வி. டினோஜன் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் மரணமடைந்தார்.

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தா அல்லது அதே திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டு ஏற்பட்ட விபத்தா என ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி, நடத்துனருக்கு கத்திக்குத்து!

Pagetamil

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இராஜினாமா

east tamil

17 இந்திய மீனவர்கள் கைது

east tamil

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

east tamil

மதுசாலைகளை மூடக் கூறி கண்டன பேரணி

east tamil

Leave a Comment