25.5 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இலங்கை

இலங்கைக்குள் தலைமறைவாக உள்ள யுவதியை மீட்க நடவடிக்கையெடுங்கள்: அந்த நாட்டு வெளியுறவுதுறையை கோரும் எம்.பி!

இலங்கையில் தலைமறைவாக உள்ள வெளிநாட்டில் சிக்கியுள்ள பிரித்தானிய யுவதியான கெய்லி ஃப்ரேசர், பாதுகாப்பான முறையில் பிரித்தானியா திரும்புவதற்கு அந்த நாட்டு வெளியுறவுத்துறை தலையிட வேண்டுமென அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளர்.

வடகிழக்கு ஃபைஃப் பாராளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய்ன் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்தித்து, ஃப்ரேசர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெறுமாறு கோரியுள்ளார்.

இலங்கையின் ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து, கடந்த ஆண்டில் தீவிரம் பெற்றிருந்த போராட்ட சமயத்தில், 35 வயதான கெய்லி ஃப்ரேசர் பரவலாக செய்திகளில் அறியப்பட்டவர்.

இலங்கைக்கு ஆய்வு மாணவியாக வந்த அவர், மக்கள் போராட்டக்காரர்கள் பற்றிய வீடியோக்களை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இதையடுத்து  கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் குடியகல்வு, குடிவரவு துறையினர் சோதனை நடத்தி, அவர் தவறான விசாவில் நாட்டிற்குள் நுழைந்ததாக கூறி அவரது பாஸ்போர்ட்டைக் கைப்பற்றினார்.

தாவரவியல் மருத்துவம் படிப்பதற்காக நாட்டிற்கு வந்திருந்த ஃப்ரேசர், சிறிதுகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

தனது நாடு கடத்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடினார். அவரது  கோரிக்கை உயர்நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்ப்டது.

ஆனால், ‘நாட்டின் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுவேன் என்ற அச்சத்தில் இலங்கையில்  சரணடைய பயப்படுகிறேன்“ என ஃப்ரேசர் கூறுகிறார்.

இந்த பின்னணியிலேயே, பாராளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய்ன் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்தித்து, ஃப்ரேசர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படுவார் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியை இலங்கையிடம் கோருமாறு கேட்டுள்ளார்.

அத்தகைய உத்தரவாதங்கள் வழங்கப்படும் வரை,  ஃப்ரேசர் மறைவிலிருந்து வெளியே வர முடியாது என்று கூறுகிறார்.

ஃப்ரேசர் பிரித்தானிய ஊடகங்களிடம் குறிப்பிடுகையில், ‘நான் இப்போது இங்கே பிழைத்துக்கொண்டிருக்கிறேன், ஏதாவது மாற்றத்திற்காக காத்திருக்கிறேன். எனக்கு விருப்பத்தேர்வுகள் எதுவும் இல்லை, நடைமுறையில் எனக்கு நம்பிக்கை இல்லை.

எனக்கு எங்காவது உறங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் ஏதாவது இருப்பதை உறுதிசெய்வதே முன்னுரிமை.

இன்டர்நெட் கிடைப்பதே ஒரு ஆடம்பர வாழ்க்கையை ஒத்ததாகும். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த முறைக்கு நல்ல அணுகலைப் பெற்றதற்கு நான் நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

இதை நான் வாழ்க்கையாக அங்கீகரிக்கவில்லை – இது இருப்பு. இங்கு அதிகாரத்தில் இருக்கும் இந்த பைத்தியக்காரர்களின் தயவில் உலகமே என்னைக் கைவிட்டது போல் உணர்கிறேன்“ என குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் இலங்கை அதிகாரிகளிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும், நிலத்தடி பதுங்குகுழியிலும் மறைவாக இருந்ததாகவும்,  நம்பகமான நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வலையமைப்பு தன்னை பாதுகாப்பாக வைத்திருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்துடன் வழக்கைப் பற்றி விவாதிக்கும் முயற்சிகள், சிக்கல்களால் நிறைந்ததாக அவர் கூறுகிறார்.

நாட்டின் குடிவரவு அதிகாரிகளிடம் அவர் சரணடைய மறுப்பதால், தங்களுக்கு வேறு வழிகள் இல்லை என்று அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக கூறுகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

24வது ஆண்டில் மிருசுவில் படுகொலை

east tamil

யாழ் மாவட்டத்துக்கு வெளியில் கடமையாற்றாத ஆசிரியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

east tamil

தனங்கிளப்பில் தாறுமாறாக தறிக்கப்படும் பனைகள்: சாவகச்சேரி பொலிசார் ‘பம்மி’யதன் பின்னணி என்ன?

Pagetamil

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பற்றிய அறிவிப்பு

Pagetamil

Leave a Comment