காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் காட்டு யானைகள் கூட்டம் மோதியதில் மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
நேற்று (27) இரவு 11.50 மணியளவில் கல்கமுவ நகருக்கு அருகில் குறித்த மூன்று காட்டு யானைகளும் புகையிரதத்துடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் ரயிலின் என்ஜினின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது.
விபத்தின் பின்னர், ஒரு மணித்தியால தாமதத்தின் பின்னர் புகையிரதம் மீண்டும் கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த யானைகள் தொடர்பில் கல்கமுவ யானை கட்டுப்பாட்டு பிரிவுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1