அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து தனுஷ்க குணதிலக விடுவிக்கப்பட்டாலும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தும் என இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று (28) பிற்பகல் தெரிவித்தார்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்த அவர் உலகக் கிண்ணத்தின் போது ஒழுக்கத்தை மீறியதாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளிலும் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் இலங்கை வந்தவுடன் குற்றப்பத்திரிகை கையளிக்கப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அவர் இலங்கை திரும்பிய பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் ஒழுக்காற்று குழுவின் ஊடாக விசாரணை ஆரம்பிக்கப்படும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1