24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
குற்றம்

வீட்டுக்கு தாமதமாக வரும் கணவன்; கர்ப்பிணி மனைவிக்கு எழுந்த சந்தேகம்: பொலிஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

கணவன் தாமதமாக வீட்டுக்கு வருவதால் சந்தேகமடைந்த மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததால், பாடசாலை மாணவி வன்புணரப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மஹாவிளாச்சிய பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

27 வயதான கணவன், அண்மைக்காலமாக வீட்டுக்கு தாமதமாகவே வந்துள்ளார். இதனால் கர்ப்பிணி மனைவிக்கு சந்தேகம் எழுந்தது.

அண்மைக்காலமாக தம்மையும் இளைய பிள்ளையையும் தவிர்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரே கணவர் வீட்டுக்கு வருவதாக குறிப்பிட்டு, கர்ப்பிணி மனைவி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டபோது, ​​கணவரால் பாடசாலைச் சிறுமி வன்புணரப்பட்டது தெரிய வந்ததன் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டதாக மஹாவிளச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் மனைவி 6 மாத கர்ப்பிணி.

கணவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போது, பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட விபரம் வெளிச்சத்துக்கு வந்தது.

சந்தேகநபர் சென்றுவரும் வீட்டிலிருந்த தாயையும், மகளையும் பொலிசார் விசாரணைக்குட்படுத்திய போது, இரவு நேரத்தில் இரகசியமாக வீட்டுக்குள் நுழைந்து, மாணவியை வன்புணர்வுக்குள்ளாக்கியதும், இருவரும் காதலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரான கணவர் கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment