27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

இலங்கையில் இன்று 13 பேருக்கு மரணதண்டனை

இலங்கையில் இன்று 13 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்களால் வெட்டி நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று (27) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அண்மித்த நாட்களில் களுத்துறை தெற்கில் உள்ள கலீல் பிளேஸில் வசிக்கும் சேயர் மொஹமட் மொஹமட் பாரிஸ் என்பவர் கூரிய ஆயுதங்களால் கொல்லப்பட்டமை தொடர்பில் எட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

46 வயதான மொஹமட் ஜைன் முகமது ஹம்சா, 49 வயதான அப்துல் கரீம் மொஹமட் ரவிஸ்தீன், 59 வயதான மொஹமட் மவ்ஸ் மொஹமட், 45 வயதான மொஹமட் ரியாஸ்தீன் மொஹமட், 47 வயதான மொஹமட் ஜிப்ரி மொஹமட் ஜின்னா, 43 வயதான மொஹமட் ஜிப்ரி மொஹமட் பிர்தவ்ஸ், 44 வயதான மொஹமட் சஹீர் மொஹமட் சியாம், 45 வயதான மொஹமட் நிலாப்தீன் மொஹமட் அஜீல் ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீன்பிடி படகில் 152 கிலோகிராம் ஹெரோயினை இலங்கைக்கு கடத்தி வந்தபோது, கடற்படையினரால் கடலில் பிகைது செய்யபட்ட 5 மீனவர்களுக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்லே தண்டனை விதித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை விதிக்கும் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்களின் செயலால் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அவல நிலையையும் நீதிபதி கருத்தில் கொண்டார்.

மாத்தறை திக்வெல்ல மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

152.34 கிலோகிராம் ஹெராயினுடன் அவர்கள் 2019 நவம்பர் 2 கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரிசி இறக்குமதியில் நெருக்கடி

east pagetamil

கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

2024 வாக்காளர் பதிவின் அடிப்படையிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

Pagetamil

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Leave a Comment