மீகொடை, கன்வன்வ பிரதேசத்தில் இன்று (25) மொத்த வியாபார நிலையத்துக்குள் புகுந்த துப்பாக்கிதாரிகள் இருவர் பெட்டகத்திலிருந்த அறுபது இலட்சம் ரூபாவை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு கொள்ளையர்கள் T-56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியுடன் நிறுவனத்திற்குள் நுழைந்து வரவேற்பாளர்களை கழுத்தைப் பிடித்து தள்ளியுள்ளனர்.
துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள கமெரா காட்சிகள் ஊடாக சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1