26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

பீடி வியாபாரியிடம் ரூ.10 இலட்சம் பறித்தவர்கள் கைது!

வலஸ்முல்லை இராஜபுரகொடவில் பீடி வியாபாரி ஒருவரை தாக்கி 10 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்றதாக சந்தேகத்தின் பேரில் தங்காலை கலால் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் சிப்பாய் உட்பட நான்கு பேர் இன்று (25) பிற்பகல் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  .

பீடி வியாபாரியின் வீட்டில் கலால் திணைக்கள குழு சோதனை நடத்தியதில் சுமார் 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி மூடைகள் சிக்கியது.

உரிமம் இல்லாமல் பீடி இலைகளை வைத்திருப்பது குற்றமாகும் என்பதால், சம்பவத்தை மூடிமறைக்க 10 இலட்சம் ரூபாய் கேட்டதாக போலீசார் கூறுகின்றனர். பின்னர், பீடி வியாபாரி வலஸ்முல்லை நகருக்கு வந்து குழுவிடம் இரண்டு முறை பணம் கொடுத்துள்ளார்.

அங்கு அவர் தாக்கப்பட்டு வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் திரு.கே.பி.கீர்த்திரத்னவின் பணிப்புரையின் பிரகாரம் தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வலஸ்முல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

Leave a Comment