காலி டிக்சன் வீதிப் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வர்த்தகர், இராஜாங்க அமைச்சர் டி.வி.சானகவின் மனைவியின் தந்தை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மாலை அவர் காரில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உயிரிழந்த நபர் புடவை வியாபாரம் செய்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் 17 வெற்று தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.