26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

ரணிலுடன் எம்.பிக்களுக்கு உல்லாச பயணம்!

ஐ.நா அமர்வுகளுக்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி பரிவாரத்தில் அமைச்சர் பதவிகள் அற்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.

இது சமூக ஊடகங்களில் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரச நிதியை வீண்விரயம் செய்யும் மோசமான அரசியல் என்பதை பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ரணில் விக்ரமசிங்க அழைத்து சென்றுள்ள பரிவாரத்தில் அமைச்சர்கள் அல்லாத,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மகிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, மற்றும் பிரேமநாத் சி.தொலவத்த, எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப், மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பல்டி எம்.பி வடிவேல் சுரேஷ் ஆகிய எம்.பிக்கள் இடம்பிடித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் பெரும் பரிவாரங்கள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, பொதுமக்கள் நிதி வீண் விரயம் செய்யப்படுவது ஒரு கலாசாரமாகவே காணப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியும் அதற்கு சளைத்ததல்ல என்பதை ரணில் விக்ரமசிங்க தற்போது நிரூபித்து வருகிறார் என்பதை சமூக ஊடகங்களில் பலரும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

தற்போது, பொதுஜன பெரமுனவின் பல மூத்தவர்கள் தமக்கு அமைச்சு பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த இவர்கள் அழைத்து செல்லப்பட்டிருக்கலாம் என சமூக ஊடகங்களில் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

Leave a Comment