பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
யூடியூபர் வாசன்.கடந்த 17ஆம் திகதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங்செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து,பாலுசெட்டிசத்திரம் போலீஸார் அச்சுறுத்தும் வகையில் வாகனம்ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துஅவரை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள்நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கை எலும்பு முறிவு ஏற்பட்டஇடம் மற்றும் இடுப்பு பகுதியில்அதிகம் வலி இருப்பதாக வாசன்தெரிவித்தார். இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்ததும், டிடிஎஃப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.



