25.1 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

சாலே மிடில் ஓர்டர்; கோட்டாவும், மைத்திரியுமே ஓபனிங்: பொன்சேகா!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால், பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (21) பிற்பகல் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தொடர்ந்தும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அப்போதுதான் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு நடந்த உரையாடல் இது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா:

இதில் இரண்டு தலைவர்கள் உள்ளனர். ஒருவர் அவர்(மைத்திரி). மற்றவர் கோட்டாபய சாலே ஒரு மிடில் ஓர்டர் பேட்ஸ்மேன் மட்டுமே. மைத்திரிபால சிங்கப்பூரில் இருந்தபோது வெடிகுண்டு வெடித்தது. அவர் இந்தியாவில் சாலேயை சந்தித்து, குண்டுவெடிப்பை பற்றி அறிந்து கொண்டதும், சிங்கப்பூர் சென்று பதங்கி விட்டார். அவர் இலங்கைக்கு வராமல் ஹோட்டலில் பதுங்கியிருந்தார். படுக்கைக்கு அடியில் பதுங்கி இருந்துள்ளார்.

இதுகுறித்து பாராளுமன்றக் குழுவில் கேள்வி எழுப்பினேன். அவர் என்ன சொன்னார்? விமானத்தில் இருக்கைகள் இல்லை என்று கூறினர். பொய் சொல்லிவிட்டு இரவில் சகலரும் உறங்கியதன் பின்னர் நாட்டுக்கு வந்தார்.இப்படி ஒரு கோழைத் தலைவன் இதுவரை பிறந்ததில்லை. நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம்.

மைத்திரிபால சிறிசேன: சாலே எங்கே இருந்தார்? திருப்பதி எங்கே இருக்கிறது? நான் திருப்பதிக்கு நிறைய தடவைகள் போயிருக்கிறேன், சாலேயை சந்தித்ததில்லை. இந்தியாவில் நான் எங்கே இருக்கிறேன் என்று கூட சலேவுக்குத் தெரியாது, அவர் பொய் சொல்கிறார். அவர் .ராணுவத்தில் இருந்தபோது, ​​அவரது முகாம் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

பொன்சேகா: இந்த பைத்தியக்காரன் தினமும் இந்த கதையை சொல்கிறார். பாதுகாவலரின் பொறுப்பில் இருப்பவர் இராணுவ தளபதி அல்ல. இப்போது வாலை மிதித்து கதறுகிறார். அவர் முன்னாள் ஜனாதிபதி போல் நடந்து கொள்கிறாரா? பின்வரிசை எம்.பி போல் நடந்து கொள்கிறார். முட்டாளைப் போல் கத்துகிறார்.

இந்த அலறல் தலைமறைவாக இருந்து வருகிறது.நாங்கள் ஒருபோதும் படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்பவர்கள் அல்ல. பொது வேட்பாளர்களுக்கும் இதனால் அவமானம். 2015ல் அந்த முட்டாள்தனத்தையும் செய்தோம். நாங்கள் இப்போது வெட்கப்படுகிறோம்.

மைத்திரிபால சிறிசேன அவர் பொய் சொல்கிறார். அவரது இராணுவத் தளபதி பதவிக் காலத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இறந்தனர். அவர் அதைப் பற்றி பேசுவதில்லை. இராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாத இராணுவத் தளபதி அவர். உடல்கள் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன. அவரை வேறு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இப்போது தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகிறார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு முற்றிலும் ஒரு தரப்பை சார்ந்தது.

பொன்சேகா: நான் இராணுவத் தளபதியாக இருந்தபோது பதினைந்தாயிரம் வீரர்கள் இறந்தார்கள். ஆயிரமோ இரண்டாயிரமோ உயிர்களை அர்ப்பணித்ததால் தான் 25 ஆயிரம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். போர் வெற்றி பெற்றது. அர்ப்பணிப்புகளை செய்யாமல் போரை வெல்ல முடியாது. படுக்கைக்கு அடியில் இருந்து போரை வெல்ல முடியாது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

east tamil

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

east tamil

Leave a Comment