இரத்தினபுரி மாவட்ட விநாயகர் சதுர்த்தி விழாவும் இந்து எழுச்சி ஊர்வலமும் கஹவத்தை இந்து மகா சபையும் விஷ்வ இந்து பரிஷத்தும் இணைந்து 24.09.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கஹவத்தை நகரில் வெகு விமர்சையாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, இவ் ஊர்வலமானது அன்றைய தினம் பிற்பகல் 1:00 மணிக்கு யாயின்ன சர்வோதயம் கட்டிடத்திற்கு அருகாமையில் விநாயகர் பூஜையுடன் ஆரம்பித்து, கஹவத்தை நகர் வழியாக ஊர்வலமாக வந்து, கெட்டியதென்ன ஆற்றங்கரையில் விஷர்ஜன நிகழ்வுடன் நிறைவுறும்.
விழாவினை சிறப்பிக்க அனைவரையும் அழைப்பதாக கஹவத்தை இந்து மகா சபையினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1